நீண்ட இடைவெளிக்குப்பின்...
எனது மனஉளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும்
வடிகாலில்லாமல்
எதன்மீதும் போதையில்லாமல்
உழன்றுகொண்டிருந்தேன்...
போதை எதற்கென்றா கேட்கின்றீர்?
என்னதான் மனஉளைச்சலும் நிம்மதியின்மையும்
இருந்தாலும்,
மயக்கமோ போதையோ உள்ள
எதனிடத்திலேயும் மனதை செலுத்திவிட்டால்
மனம் லேசாகிவிடும்...
இவ்விசயத்தில் நான் மிகப்பெரிய துரதிருஷ்டசாலி,
எனக்கு மயக்கமோ போதையோ
எதனிடத்திலேயும் இல்லை.
அப்படி நினைத்தே மறுகினேன்...
சமீபத்தில் உணர்ந்தேன் என் போதையை...
அது,
எழுத்து... எழுதுவது...
கண்டேன் போதையை...
எடுத்தேன் கணினியை...
மீட்டேன் என் பிளாக்கை...
ஆரம்பித்தேன் என்கிறுக்கலை...
என்னை பிரதிடுயெக்கப்போகிறேன் இதில்...
இவ்வடிகால் எனக்கு நிம்மதியளிக்கும்
என்ற நம்பிக்கையில்...
என்னால் தொடர்ந்து, இடைவெளி இல்லாமல் எழுதமுடியும்
என்று சத்தியமாக என்னாலே நம்ப முடியாது.
ஆனால் தொடர்ந்து முயற்சிப்பேன்... J


No comments:
Post a Comment